பன்றிகளுக்கான தீவனப்பராமரிப்பு- கவனத்தில் கொள்ள வேண்டியவை
- பன்றிகளுக்கு தீவனம் தயாரிக்கும் போது குறைந்த விலையில் கிடைக்கும் மூலப்பொருட்களையே உபயோகிக்க வேண்டும்
- தானிய வகைகள்- மக்காச்சோளம், கம்பு, சோளம், கோதுமை, அரிசி அல்லது
அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும் தானிய
வகைகள் தீவனம் தயாரிக்கும் போது முக்கிய மூலப்பொருட்களாக உபயோகிக்க
வேண்டும்
- புரதச்சத்துக்காக பிண்ணாக்கு வகைகள், கருவாட்டு தூள் அல்லது இறைச்சித்தூள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்
- பன்றிகளை மேய்ச்சலுக்கு அனுமதித்தாலோ அல்லது அவைகளுக்கு பசுந்தீவனம் அளித்தாலோ வைட்டமின் சத்துக்களை அளிக்கத் தேவையில்லை.
- பன்றிகளுக்கு விலங்கு புரதம் அளிக்கப்படாவிட்டால் வைட்டமின் பி 12 சத்து தீவனத்துடன் அளிக்கப்பட வேண்டும்
- எதிரிஉயிரி மருந்துகள் 1 கிலோ கிராம் தீவனத்திற்கு 11 மில்லி கிராம் என்ற அளவில் கலந்து அளிக்கப்பட வேண்டும்
- தாது உப்புகள் தீவனத்துடன் கலந்து அளிக்கப்பட வேண்டும்
பன்றிகளின் வெவ்வேறு வயதுக்கேற்ற தீவனத்தேவை
சத்துக்கள்
|
குட்டிகளைப்பிரிப்பதற்கு முன்அளிக்கப்படவேண்டியதீவனம்
|
பன்றிக்குட்டிகள்(உடல் எடை 20முதல் 40 கிலோ)வரைஅளிக்கப்படவேண்டியதீவனம்
|
பன்றிக்குட்டிகள்(உடல் எடை 90முதல் 40 கிலோ)வரைஅளிக்கப்படவேண்டியதீவனம்
|
புரதச்சத்து
பிண்ணாக்குகள்
|
16-18
|
14-16
|
13-14
|
விலங்கு புரதம் (மீன் தூள்,இறைச்சித்தூள்)
|
8-10
|
4
|
2
|
மக்காச் சோளம்அல்லது சோளம்அல்லது உடைந்த கோதுமைஅல்லது அரிசிகுருணைஅல்லது) (%)
|
60-65
|
50-55
|
40-50
|
கோதுமை தவிடுஅல்லது அரிசி தவிடு (%)
|
5
|
10
|
20
|
லூசர்ன் தூள்(%) (கிடைக்கும்பட்சத்தில்)
|
--
|
5-8
|
--
|
தாது உப்புக் கலவை(%)
|
0.5
|
0.5
|
0.5
|
எதிர் உயிரி(மிகி)
|
40
|
20
|
10
|
வெவ்வேறு பன்றிகளின் வயதுக்கேற்ற அடர்தீவன கலவை
| உட்பொருட்கள் | குட்டிகளைப்பிரிப்பதற்குமுன்அளிக்கப்படவேண்டியதீவனம் | பன்றிக்குட்டிகள்(உடல் எட ை 20 முதல்40 கிலோ)வரைஅளிக்கப்படவேண்டியதீவனம் | பன்றிக்குட்டிகள்(உடல் எடை 90முதல் 40கிலோ) வரைஅளிக்கப்படவேண்டியதீவனம் | சினைமற்றும்பாலூட்டும்பன்றிகள் |
| மக்காச் சோளம்அல்லது சோளம்அல்லது உடைந்த கோதுமை அல்லதுஅரிசி குருணைஅல்லது பார்லி வெவ்வேறுஅளவுகளில் | 65 | 50 | 50 | 50 |
| பிண்ணாக்குகள்(கடலைப்பிண்ணாக்குஅல்லது சோயாபிண்ணாக்குஅல்லது எள்பிண்ணாக்கு ) | 14 | 18 | 20 | 20 |
| கரும்பு பாகு | 5 | 5 | 5 | 5 |
| கோதுமை தவிடுஅல்லது அரிசி தவிடு | 10 | 15 | 25 | 18 |
| கருவாட்டுத்தூள்அல்லது இறைச்சிதூள்அல்லது பால் பவுடர்அல்லது பால்பண்ணை கழிவுகள் | 5 | 5 | 3 | 5 |
| தாது உப்பு கலவை | 1 | 1.5 | 1.5 | 1.5 |
| உப்பு | -- | 0.5 | 0.5 | 0.5 |
பன்றிகளுக்கு தீவனம் அளிக்கும் போது மேற்கூறியவாறு வயதுக்கேற்ற தீவனக்கலவை
தயார் செய்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்தால் அவை
தீவனத்தினை வீணாக்காமல் சாப்பிடும். <
பன்றிகளின் உடல் எடைக்குத் தகுந்த தீவனமிடும் அளவு கீழ்வருமாறு
பன்றியின் உடல் எடை(கிலோ)
|
தினசரி பன்றி உட்கொள்ளும்தீவனத்தின் அளவு (கிலோ)
|
25
|
2.0
|
50
|
3.2
|
100
|
5.3
|
150
|
6.8
|
200
|
7.5
|
250
|
8.3
|
பன்றிகளுக்கான அடர் தீவனம் தயாரிக்கும் போது தானியங்களை நன்கு அரைக்க
வேண்டும். பன்றிகளுக்கு அடர் தீவனத்தினை அளிக்கும் போது அதனை தண்ணீர் ஊற்றி
பிசைந்து கொடுக்க வேண்டும். அடர் தீவனத்தில் நார் சத்து அதிகமாக இருக்கும்
போது அடர் தீவனத்தினை குச்சி தீவனம் வடிவில் தயாரித்தால் உடல் எடை
அதிகரிக்கும். குச்சி தீவனம் வடிவில் அடர் தீவனம் அளிக்கப்படும் போது
தீவனம் வீணாவது தவிர்க்கப்படுகிறது.
இனப்பெருக்கத்திற்காக உபயோகிக்கும் பெண் பன்றிகளுக்கு அளவுக்கு அதிகமாக
தீவனமளிக்கக்கூடாது. அளவுக்கு அதிகமான எடை உடைய பன்றிகளுக்கு பிறக்கும்
குட்டிகள் உடல் எடை குறைவாக இருக்கும். மேலும் அளவுக்கு அதிகமாக எடை உடைய
பன்றிகள் குட்டி போடும் போது குட்டிகளை நசுக்கி குட்டிகள் இறக்க நேரிடும்.
கிடேரி பன்றிகள் சினையானதற்கு பின் குட்டி போடும் வரை அதிகரிக்கும் உடல்
எடை 35 கிலோவாகவும் ஏற்கனெவே குட்டி ஈன்ற பன்றிகள் மீண்டும் சினை பிடித்த
பின் 55 கிலோவும் உடல் எடை அதிகரிக்க வேண்டும்.
|
No comments:
Post a Comment