இந்தியாவில் வளர்க்கப்படும் குறிப்பிடத்தக்க வான்கோழியினங்கள்
இந்த இனத்தை சேர்ந்த வான்கோழிகளின் இறகுகள் வெண்கல நிறத்தில் இல்லாமல், கறுப்பு நிறத்தில் இருக்கும். பெட்டை வான்கோழிகளின் மார்பில் இறகுகள் கறுப்பு நிறத்தில் வெள்ளைநிற நுனியுடன் காணப்படும். இதனைக் கொண்டு சேவல் மற்றும் பெட்டைக்கோழிகளை சீக்கிரமாக, அதாவது 12 வார வயதிலேயே கண்டுபிடிக்கமுடியும்.
2. அகன்ற மார்புடைய வெள்ளை இனம்;
கரி-விரட்
அகன்ற மார்புடைய வெள்ளை வகை
16 வாரத்தில், கோழிகள் 8 கிலோ எடையும், ஆண் வகைகள் 12 கிலோ எடையும்இருக்கும் பொழுது இறைச்சிக்காக விற்கப்படுகிறது.
உள்ளுர் சந்தையின் தேவைப்கேற்ப, குறுகிய வயதுடைய வான்கோழிகளை வெட்டி வறுப்பதற்கு பயன்படுத்தலாம்.
இந்த இனம், அகன்ற மார்புடைய வெண்கலம் மற்றும் வெள்ளைஇறகுகளையுடைய வெள்ளை ஹாலந்து வான்கோழிகளின் கலப்பு ஆகும். அதிகவெப்பத்தினைத் தாங்கக்கூடியதாகவும் மற்றும் இறைச்சி சுத்தமாகஇருப்பதாலும் வெள்ளை நிற இறகுகளுடைய வான்கோழிகள் இந்தியாவின்வேளாண்-சூழ்நிலைகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன.
3. பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை இனம்
இவ்வினம் அகன்ற மார்புடைய வெள்ளையின வான்கோழிகளின் நிறம் மற்றும்வடிவத்தை ஒத்ததாகவும், உருவத்தில் அதை விட சிறியதாகவும் இருக்கும். இவற்றின் முட்டை உற்பத்தித்திறன், முட்டை பொரிக்கும் மற்றும் கருவுறும் திறன் மற்ற இனங்களை விட அதிகம். இவற்றின் அடைகாக்கும் காலம் மற்ற இனங்களை விட குறைவாக இருக்கும்.
4. நந்தனம் வான்கோழி 1
இது கருப்பின நாட்டு வான்கோழியும் பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளைவான்கோழி இனமும் சேர்ந்த கலப்பினம். இது தமிழக சீதோஷ்ண நிலைக்குஏற்றது.
|
வான்கோழி வளர்ப்புப் பண்ணையின் பொருளாதார காரணிகள்
| |||||||||||||||||||||||||||
வான்கோழிப்பண்ணையின் மேலாண்மை
I. வான்கோழிகளில் அடைகாத்தல் முறைகள்
வான்கோழிகளில் அடைகாக்கும் காலம் 28 நாட்களாகும். முட்டைகளை அடைக்குவைப்பதில் இரு முறைகள் உள்ளன.
இயற்கையாக வான்கோழிகளைக் கொண்டு அடைகாத்தல் :
இயற்கையாகவே வான்கோழிகள் நன்கு அடைகாக்கும் திறனுடையவை. நல்லஅடைகாக்கும் வான்கோழிகள் பத்து முதல் பதினைந்து முட்டைகள் வரைஅடைகாக்கும். சுத்தமான, நல்ல வடிவமுடைய முட்டைகளை அடைக்கு வைத்தால் 60 முதல் 80 சத முட்டைகள் பொரிந்து ஆரோக்கியமான குஞ்சுகள் கிடைக்கும்.
வான்கோழி முட்டைகளை அடைக்கு வைத்து குஞ்சு பொரித்தல்
வான்கோழிகள் பொதுவாக முட்டையிடும்போதே அடைபடுத்தலில் ஈடுபடுகின்றன. இத அவைகளின் பாரம்பரிய குணம் ஆகும். வான்கோழிகள் நாட்டுக்கோழிகளைக் காட்டிலும் அதிக அளவு அடைகாக்கும் திறன் உடையது. வான்கோழிகளின் முட்டைகளை இரண்டு முறைகளில் அடைக்கு வைக்கலாம். 1. நாட்டுக்கோழி (அ) வான்கோழிகளில் அடைக்கு வைத்து குஞ்சு பொரித்தல். (2) குஞ்சு பொரிக்கும் கருவி (இன்குபேட்டர்)யில் வைத்து குஞ்சு பொரித்தல்.
நாட்டுக்கோழி (அ) வான்கோழி மூலம் அடைக்கு வைத்தல்:
வான்கோழிகளின் கருவுற்ற முட்டைகளை கண்டறிந்து அவற்றை முதலில் சேகரிக்க வேண்டும். பிறகு அவற்றை நாட்டுக்கோழிகளில் அடைக்கு வைக்க வேண்டும். நாட்டுக்கோழிகளில் அடைவைத்து குஞ்சு பொரிக்கும்போது 7 முட்டைகளை ஒரே சமயத்தில் அடைக்கு வைக்கலாம். வான்கோழிகளில் அடைக்கு வைத்தால் 10முட்டைகள் வரை வைக்கலாம். வான்கோழி முட்டைகளை அடைக்கு வைத்த நாளிலிருந்து 28 நாட்களில் குஞ்சுகள் பொரித்து வெளிவந்துவிடும்.
செயற்கை முறை அடைகாத்தல்
குஞ்சு பொரிக்கும் கருவி மூலம் அடைக்கு வைத்தல்:
வான்கோழிப் பண்ணைகளில் கருவுற்ற முட்டைகளை குறைந்தது ஒரு நாளைக்கு 3 முறையாவது சேகரிக்க வேண்டும். முட்டைகளை சேகரிக்கும்பழுது அழுக்கான முட்டை, உடைந்த முட்டை போன்றவற்றை குஞ்சு பொரிக்கும் கருவிகளில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முட்டைகளை குஞ்சுபொரிக்கும் கருவியில் வைப்பதற்கு முன் அவற்றை பரிந்துரைக்கப்பட்டகிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். சேகரித்த கருவுற்ற முட்டைகளை சுமார் 7 நாட்கள் வரை அறை வெப்ப நிலையில் குளிர்ச்சியான இடத்தில் வைத்த பிறகு குஞ்சு பொரிக்க பயன்படுத்தலாம். நாட்டுக்கோழிகளில் குறைந்த அளவு வான்கோழி முட்டைகளை மட்டும்தான் வைத்து குஞ்சு பொரிக்க முடியும். பெரிய அளவில் 200 முதல் 300 வான்கோழி முட்டைகள் வைத்து குஞ்சு பொரிக்க, குஞ்சு பொரிக்கும் கருவி கட்டாயம் அவசியம். அதிக அளவு முட்டைகளை நாட்டுக்கோழிகளில் வைத்து குஞ்சு பொரிக்க இயலாது.
குஞ்சு பொரிக்கும் கருவி என்பது வான்கோழி முட்டைகளை குஞ்சு பொரிக்கும் கருவியில் வைத்து செயற்கையாக குஞ்சு பொரிப்பதாகும். இதை பயன்படுத்துதவற்கு தகுந்த பயிற்சி மற்றும் கவனம் தேவை. இது மின்சாரத்தில் இயங்கக் கூடிய இயந்திரமாகும். குஞ்சு பொரிக்கும் கருவியின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சீராக்குவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் கருவியினுள் ஒரு வெப்பநிலை மானியும், ஈரப்பதமானியும் இருக்கும். கருவியினுள் வெப்பநிலை குறைந்தால், உளளே உள்ள மின்சார பல்பு உடனே எரியும். கருவியின் வெப்பநிலை அதிகமானால் மின்சார பல்பு அணைந்து உள்ளே உடனே காற்றாடி சுற்றும்.
குஞ்சு பொரிக்கும் கருவியில் இரண்டு வகையான பாகங்கள் இருக்கும். ஒன்று செட்டர் என்றும் மற்றொன்று ஹேட்சர் என்றும் அழைக்கப்படுகிறது.
குஞ்சுப்பொரிக்கும் கருவியில் இருக்கும் செட்டர் மற்றும் ஹேட்சரில் வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவுகளை பின்வருமாறு அமைக்க வேண்டும்:
செட்டரில் முட்டைகளை அடுக்கி வைத்து முதல் 26 நாட்கள் வரை முட்டைகள் திருப்பப்படுகிறது. பொதுவாக தாய் வான்கோழி, தன் முட்டைகளை மூக்கு அலகாலும், கால் விரல்களாலும் திருப்பிவிட்டு, எல்லா முட்டைகளுக்கும் ஒரே சீராக இறக்கையின் வெப்பம் கிடைக்கச் செய்கிறது. இதே போன்று குஞ்சு பொரிக்கும் கருவியில் உள்ள முட்டைகள் அனைத்திற்கும் வெப்பம் கிடைக்க முட்டைகள் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை திருப்பப்படுகிறது. முட்டைகள் திருப்புவது மின்சாரம் இல்லாதபோது நின்றுவிட்டால் அனைத்து முட்டைகளும் குஞ்சு பொரிக்கும் தன்மையை இழந்து கெட்டுவிடும். ஆகையால் இதற்கு ஒரு ஜெனரேட்டர் பொருத்தி ஆட்டோமேட்டிக் குஞ்சு பொரிக்கும் கருவி வாங்கினால் நன்றாக இருக்கும். 27 முதல் 28 நாட்கள் வரை முட்டைகள் ஹேட்சரில் வைக்க வேண்டும். இந்த நாட்களில் முட்டைகளை திருப்ப கூடாது. ஏனென்றால் கடைசி இரண்டு நாட்களில் குஞ்சுகள் பொரிக்கத் தொடங்கிவிடும். பெரிய அளவில் வான்கோழிப் பண்ணை வைக்க முயலுபவர்கள் ஹேட்சரி யூனிட் ஒன்று வாங்கி வைத்து குஞ்சு பொரிக்கலாம்.
II. குஞ்சுப்பருவம்
வான்கோழிகளில் முதல் நான்கு வார வயது குஞ்சுப்பருவமாகும். ஆனால்குளிர்காலங்களில் இப்பருவம் ஐந்து முதல் ஆறு வாரங்கள் நீடிக்கக்கூடும்.பொதுவாக கோழிக்குஞ்சுகளை ஒப்பிடுகையில் வான்கோழிக்குஞ்சுகளுக்கு,இரண்டு மடங்கு இடம் தேவைப்படும். குஞ்சுகள் வளரும் கொட்டகையை,அகச்சிவப்பு பல்புகள் அல்லது எரிவாயு மூலம் இயங்கும் அடைகாக்கும் கருவிகளைக் கொண்டு, மிதமான வெப்பத்தில் பராமரிக்க வேண்டும்.
| ||||||||||
குஞ்சுப்பருவத்தில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய விசயங்கள்
|
ஆழ்கூளப் படுக்கை
வான்கோழிக்குஞ்சு கொட்டகையில் பொதுவாக மரத்தூள், நெல் உமி, நறுக்கியவைக்கோல் போன்ற பொருட்களை ஆழ்கூளப் படுக்கையமைக்க உபயோகப்படுத்தலாம். முதலில் ஆழ்கூளம் சுமார் இரண்டு அங்குலம், பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மூன்று முதல் நான்கு அங்குல உயரத்திற்க்கு அதிகரிக்கலாம். தகுந்த கால இடைவெளியில் ஆழ்கூளத்தினை அடிக்கடி கிளறி விட்டால் ஆழ்கூளம் கெட்டியாகாமல் இருக்கும்.
|
வான்கோழி வளர்ப்பு முறைகள்
வான்கோழிகளை திறந்த வெளியில் அல்லது கொட்டிலில் அடைத்தும்வளர்க்கலாம்.
அ. திறந்தவெளி வளர்ப்பு முறை
நன்மைகள்
திறந்தவெளியில் தீவனம் அளித்தல்
வான்கோழிகளை திறந்தவெளிகளில் வளர்க்கும் போது அவை மண்புழுக்கள்,சிறிய பூச்சிகள், நத்தைகள், சமையலறைக்கழிவுகள், கரையான் போன்ற புரதம் அதிகமான பொருட்களை உண்பதால் தீவனச்செலவு 50 சதவிகிதம் வரை குறைகிறது. இது தவிர பயிறு வகை தீவனங்களான வேலி மசால், குதிரை மசால் மற்றும் முயல் மசால் போன்றவற்றை வான்கோழிகளுக்கு உணவாக அளிக்கலாம். திறந்த வெளியில் சுற்றித்திரியும் வான்கோழிகளின் கால்களில் ஏற்படும் சுணக்கம் மற்றும் ஊனத்தைத் தவிர்க்க, வான்கோழி ஒன்றிற்கு வாரத்திற்கு 250 கிராம் அளவு சுண்ணாம்பு சத்து கொடுக்க வேண்டும். காய்கறிக்கழிவுகளை கொடுப்பதன் மூலம், தீவனச்செலவினைக் பத்து சதம் வரை குறைக்க வாய்ப்புள்ளது.
வான்கோழிக் குஞ்சுகளின் சுகாதார மேலாண்மை
திறந்தவெளியில் வளர்க்கப்படும் வான்கோழிகள் அக ஒட்டுண்ணிகள்(உருளைப்புழுக்கள்) மற்றும் புற ஒட்டுண்ணிகள் (கோழிப்பேன்) தாக்குதலுக்குஅதிகம் ஆளாகிறது. எனவே மாதமொரு முறை வான்கோழி குஞ்சுகளுக்கு குடற்புழு நீக்கமும், மருந்து குளியலும் செய்வதன் மூலம் இவற்றின் தாக்குதலைக் குறைக்கலாம்.
ஆ. கொட்டிலில் அடைத்து வளர்க்கும் முறை
நன்மைகள்
கொட்டகை அமைப்பு
|
வான்கோழிகளை பிடிக்கும் மற்றும் கையாளும் முறைகள்
எல்லா வயதுடைய வான்கோழிகளையும் ஒரு குச்சியினைக் காட்டிஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்லலாம். வான்கோழிகளைபிடிப்பதற்கு இருட்டான அறை நல்லது. இருட்டு அறைகளில் வான்கோழிகளின் இரண்டு கால்களையும் பிடித்து கொள்வதன் மூலம் பிடிக்கலாம். ஆனால் வளர்ந்த வான்கோழிகளை மூன்றிலிருந்து நான்கு நிமிடங்களுக்கு மேல் தலைகீழாக தொங்கவிடக்கூடாது.
|
வான்கோழிகளுக்குத் தேவைப்படும் தங்குமிடம், தீவனம் மற்றும் தண்ணீர் வசதி
வான்கோழிகள் பொதுவாக பயந்த சுபாவமுடையவை. எனவே பண்ணைக்குள்வெளியிலிருந்து பார்வையாளர்கள் நுழைவதை கட்டுப்படுத்தவேண்டும்.
அலகு வெட்டுதல்
வான்கோழிகள் ஒன்றையொன்று கொத்திக்கொள்வதை தவிர்க்கவும், இறகுகளைபிடுங்கிக்கொள்வதைத் தடுக்கவும் அவற்றின் அலகுகளை வெட்டிவிட வேண்டும். அலகுகளை பொறித்த நாளிலிருந்து, மூன்றிலிருந்து ஐந்து வாரங்களுக்குள் மூக்குத்துவாரத்திலிருந்து அலகின் நுனி வரை பாதியளவு அலகினை வெட்டிவிட வேண்டும்.
| |||||||||||||||||||||
வான்கோழிகளின் மூக்கிலிருந்து வளரும் சதைப்பற்றை நீக்குதல்
வான்கோழிகளின் அலகின் அடிப்புறத்திலிருந்து வளர்ந்திருக்கும்சதைப்பகுதியினை நீக்குவதன் மூலம் வான்கோழிகள் ஒன்றையொன்று கொத்திக்கொள்ளும் போதும், சண்டையிட்டுக்கொள்ளும் போதும் அவற்றிற்கு ஏற்படும் தலைக்காயத்தினை தவிர்க்கலாம். வான்கோழிகளின் பொறித்த நாளிலிலேயே விரல்களைக் கொண்டு அழுத்துவதன் மூலம் நீக்கி விடலாம். பின்பு மூன்று வார வயதில் கத்தரிக்கோல் கொண்டு தலையை ஒட்டி, இச்சதைப்பற்றினை கத்திரிக்கவேண்டும்.
|
வான்கோழிகளின் கால் விரல் நகங்களை வெட்டுதல்
வான்கோழிகளின் பொறித்த நாளிலிலேயே அவற்றின் வெளிப்புறம் உள்ள நகத்தை வெட்டிவிட வேண்டும்.
|
தீவன மேலாண்மை
வான்கோழிகளுக்கு தீவனத்தை அரைத்தும், குச்சி வடிவிலும் கொடுக்கலாம்
கோழிகளுடன் ஒப்பிடும் போது வான்கோழிகளுக்கு அதிகமாக புரதம்,வைட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவைப்படும்.
பெட்டை மற்றும் சேவல்களுக்குத் தேவைப்படும் சக்தி மற்றும் புரதத்தின் அளவு வேறுபடுவதால் அவற்றை தனித்தனியே வளர்ப்பது நலம்
வான்கோழிகளுக்கு தீவனத்தட்டிலேயே தீவனம் அளிக்கவேண்டும். தரையில் தீவனத்தினை போடக்கூடாது.
ஒரு வகை தீவனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும் போது சிறிது சிறிதாக மாற்ற வேண்டும்.
வான்கோழிகளுக்கு எப்பொழுதும் சுத்தமான தண்ணீர் அளிக்கவேண்டும்.
கோடை காலங்களில் அதிகப்படியான தண்ணீர் தட்டுகளை வைக்க வேண்டும்.
கோடை காலங்களில் குளிர்ந்த நேரங்களில் வான்கோழிகளுக்கு தீவனம்அளிக்கவேண்டும்.
வான்கோழிகளின் கால்கள் வலிமையற்று இருப்பதை தவிர்க்க ஒரு வான்கோழிக்கு 30 முதல் 40 கிராம் வீதம் கிளிஞ்சல் கொடுக்கவேண்டும்.
|
பசுந்தீவனம் அளித்தல்
தீவிர முறை வளர்ப்பில், வான்கோழிகளுக்கு பசுந்தீவனத்தை மொத்ததீவனத்தில் 50 சதவிகிதம் வரை அளிக்கலாம். புதிதாக அறுக்கப்பட்ட குதிரைமசால் எல்லா வயது வான்கோழிகளுக்கும் ஏற்றது. குதிரை மசால் தவிர வேலிமசால் மற்றும் முயல் மசால் போன்ற பசுந்தீவனங்களையும் நறுக்கி வான்கோழிகளுக்கு தீவனமாக அளித்தால் தீவனச்செலவினை பெருமளவு குறைக்கலாம்.
|
வான்கோழிகளின் உடல் எடை மற்றும் தீவன தேவைகள்
வயது (வாரங்கள்)
|
சராசரி உடல் எடை (கிலோகிராம்)
|
எடுத்துக்கொண்ட மொத்த தீவனம் (கிலோ கிராம்)
|
தீவன மாற்றுத்திறன்
| |||
சேவல்
|
பெட்டை
|
சேவல்
|
பெட்டை
|
சேவல்
|
பெட்டை
| |
4ம் வாரம் வரை
|
0.72
|
0.63
|
0.95
|
0.81
|
1.3
|
1.3
|
8ம் வாரம் வரை
|
2.36
|
1.90
|
3.99
|
3.49
|
1.8
|
1.7
|
12ம் வாரம் வரை
|
4.72
|
3.85
|
11.34
|
9.25
|
2.4
|
2.4
|
16ம் வாரம் வரை
|
7.26
|
5.53
|
19.86
|
15.69
|
2.8
|
2.7
|
20ம் வாரம் வரை
|
9.62
|
6.75
|
28.26
|
23.13
|
3.4
|
2.9
|
இயற்கை முறையில் இனப்பெருக்கம்
வான்கோழிச் சேவல், பெட்டையுடன் சேரும் போது அதன் இறகுகளை பரப்பிஅடிக்கடி ஒரு வித்தியாசமான ஒலி எழுப்பும். இயற்கையான முறையில்இனப்பெருக்கம் செய்வதற்கு நடுத்தர வான்கோழிகளின் ஐந்து பெட்டைகளுக்கு ஒரு சேவல் வீதமும், பெரிய வான்கோழி இனங்களுக்கு மூன்று பெட்டைகளுக்கு ஒரு சேவல் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வளர்ந்த பெட்டை வான்கோழியிடமிருந்து சராசரியாக 40 முதல் 50குஞ்சுகள் வரை உற்பத்தியை எதிர்பார்க்கலாம். ஒரு வருடத்திற்க்கு மேற்பட்ட வான்கோழி சேவல்களை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவற்றின் விந்துக்களின் கருவூட்டும் திறன் குறைவாக இருக்கும். பொதுவாக ஒரு சேவலை மட்டும் பெட்டை வான்கோழிகளுடன் நீண்ட நாட்களுக்கு இனவிருத்திக்கு வைத்திருந்தால், அது ஒரு குறிப்பிட்ட பெட்டையிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்துவிடும். இதனைத் தவிர்க்க இனவிருத்திக்கு பயன்படும் சேவலை பதினைந்து நாட்களுக்கொரு முறைமாற்ற வேண்டும்.
|
செயற்கை முறையில் கருவூட்டல்
சீதோஷ்ண நிலையினை பொருட்படுத்தாமல் செயற்கை முறை கருவூட்டலின் மூலம் அதிகமான கருவுற்ற முட்டைகளை வான்கோழிகளிடமிருந்து பெறமுடியும் என்பதே செயற்கை முறை கருவூட்டலின் நன்மையாகும்.
|
வான்கோழி சேவலிடமிருந்து விந்தினை சேகரித்தல்
|
பெட்டை வான்கோழிகளை செயற்கை முறை கருவூட்டல் செய்தல்
வான்கோழிப்பண்ணையில் வான்கோழிகள் 8 லிருந்து 10 சதவிகித முட்டைஉற்பத்தி அளவை அடைந்தவுன் செயற்கை முறை கருவூட்டல் செய்யலாம்.
பெட்டைகளை மூன்று வாரத்திற்கொரு முறை சேவல்களிடமிருந்து சேகரித்தவிந்தினைக் கொண்டு செயற்கை முறை கரூவூட்டல் செய்ய வேண்டும் (ஒருபெட்டைக்கு 0.025 - 0.030 மிலி என்ற அளவில்).
பனிரெண்டு வாரம் கழித்து வான்கோழி பெட்டைகளை 15 நாட்களுக்கொரு முறை செயற்கை முறை கருவூட்டல் செய்யலாம்.
செயற்கை முறை கருவூட்டலை பொதுவாக மாலை ஐந்து மணியளவில்செய்யவேண்டும்.
16 ம் வாரங்களில், செயற்கை முறை கருவூட்டலின் மூலம் 80 லிருந்து 85சதவிகித முட்டைகள் கருவுற்றிருக்கவேண்டும்.
|
வான்கோழிகளுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள்
அரிசோனியாசிஸ் நோயின் அறிகுறிகள்
பொதுவாக 3-4 வார வயதுடைய குஞ்சுகள் இந்நோய்த் தாக்குதலுக்குள்ளாகின்றன. பாதிக்கப்பட்டகுஞ்சுகள் கண்கள் பாதிக்கப்பட்டு குருடாதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
இந்நோயினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளை இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தக்கூடாது. மேலும் குஞ்சுப்பொரிப்பகங்களை புகைமூட்டம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
நீலக்கொண்டை நோயின் அறிகுறிகள்
சோர்வடைதல், எடை குறைதல், நுரையுடன் கூடிய தண்ணீர் போன்ற கழிச்சல், தலை மற்றும் தோல் கருத்துப்போதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
பண்ணையினை காலி செய்து கிருமி நீக்கம் செய்தல். பண்ணையில் சிறிதுகாலத்திற்கு வான்கோழிகளை வளர்க்காமல் இருத்தல்.
நீண்ட நாட்களாக இருக்கும் சுவாச நோய் நோயின் அறிகுறிகள்
இருமல், தும்மல் மற்றும் மூக்குத்துவாரங்களிலிருந்து சளி வடிதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
மைக்கோபிளாஸ்மா தொற்று இல்லாத வான்கோழிகளை வாங்கி வளர்த்தல்.
எரிசிபிலேஸ் நோயின் அறிகுறிகள்
திடீர் இறப்பு, தாடி வீக்கம், முகப்பாகங்கள் நிறம் மாறுதல், தலை தொங்கி விடுதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
தடுப்பூசி அளித்தல்.
கோழி காலரா நோயின் அறிகுறிகள்
வான்கோழிகளின் தலை இளஞ்சிவப்பு நிறமாதல், பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த கழிச்சல், திடீர் இறப்பு.
நோய்த்தடுப்பு முறைகள்
சுகாதாரமான பண்ணை பராமரிப்பு மற்றும் இறந்த வான்கோழிகளை முறையாக அகற்றுதல்.
கோழி அம்மை நோயின் அறிகுறிகள்
வான்கோழிகளின் கொண்டை மற்றும் தாடிகளில் சிறிய மஞ்சள் நிறகொப்புளங்கள் உண்டாகி பின்பு அது காய்ந்து புண் உண்டாகுதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
தடுப்பூசி அளித்தல்.
இரத்தக்கழிச்சல் நோயின் அறிகுறிகள்
ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்டு வான்கோழிகள் இறத்தல்.
நோய்த்தடுப்பு முறைகள்
தடுப்பூசி.
இன்பெக்சியஸ் சைனோவைட்டிஸ் நோயின் அறிகுறிகள்
வான்கோழிகளின் கால் முட்டிகள் மற்றும் பாதம் வீக்கம், நொண்டுதல்,நெஞ்சுப்பகுதியில் கொப்புளங்கள் தோன்றுதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
நோய்த்தொற்று இல்லாத பண்ணைகளிலிருந்து வான்கோழிகளை வாங்குதல்.
இன்பெக்சியஸ் சைனுசைட்டிஸ் நோயின் அறிகுறிகள்
மூக்கிலிருந்து சளி வடிதல், இருமல்.
நோய்த்தடுப்பு முறைகள்
நோய்த்தொற்று இல்லாத பண்ணைகளிலிருந்து வான்கோழிக்குஞ்சுகளைவாங்குதல்.
மைக்கோடாக்சிகோஸிஸ் நோயின் அறிகுறிகள்
கல்லீரல் இரத்தத் திட்டுக்களுடன் வெளிறி கொழுப்பு படிந்து காணப்படுதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
பூஞ்சைகளால் தீவனம் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
நியுகேசில் நோயின் அறிகுறிகள்
இளைப்பு வாங்குதல், மூச்சு விட சிரமப்படுதல், கழுத்தை திருகிக்கொள்ளுதல்,வலிப்பு மற்றும் தோல் போன்ற ஓடுகளையுடைய முட்டையிடுதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
தடுப்பூசி போடுதல்.
பாரா டைபாய்டு நோயின் அறிகுறிகள்
வான்கோழிக்குஞ்சுகளில் கழிச்சல்.
நோய்த்தடுப்பு முறைகள்
நோய்த் தடுப்பு மற்றும் பண்ணைச்சுகாதாரம்.
வான்கோழி கொரைஸா நோயின் அறிகுறிகள்
மூச்சு விடும் போது சத்தம் உண்டாதல், மூக்குத்துவாரங்களிலிருந்துஅதிகமான அளவு சளி வடிதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
தடுப்பூசி போடுதல்.
காக்ஸிடியோஸிஸ் நோயின் அறிகுறிகள்
இரத்தக்கழிச்சல் மற்றும் எடைகுறைதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
முறையான பண்ணை சுகாதாரம் மற்றும் ஆழ்கூள மேலாண்மை.
வான்கோழி வெனிரியல் நோயின் அறிகுறிகள்
முட்டைகள் கருவுறும் மற்றும் குஞ்சு பொரிக்கும் திறன் குறைதல்.
நோய்த்தடுப்பு முறைகள்
கடுமையான பண்ணை சுகாதாரம்.
|
வான்கோழிகளுக்கான தடுப்பூசி அட்டவணை
முதல் நாள்
|
இராணிக்கெட் அல்லது நியுகேசில் நோய்க்கான –பி1 தடுப்பூசி
|
4 மற்றும் 5 ம் வாரங்கள்
|
கோழி அம்மை தடுப்பூசி
|
6 ம் வாரம்
|
இராணிக்கெட் அல்லது நியுகேசில் நோய்க்கான ஆர் 2 பி–தடுப்பூசி
|
8 மற்றும் 10 ம் வாரங்கள்
|
கோழி காலரா தடுப்பூசி
|
வான்கோழிகளை சந்தைப்படுத்துதல்
சேவல் மற்றும் பெட்டை வான்கோழிகள் 16ம் வார வயதில் முறையே 7.26கிலோ மற்றும் 5.53 கிலோ உடல் எடையை அடையும். இதுவே வான்கோழிகளை விற்க்கக்கூடிய சரியான சமயமாகும்.
|
வான்கோழி முட்டை
வான்கோழிகள் 30 ம் வாரம் முட்டையிட ஆரம்பித்து தொடர்ந்து 24வாரங்கள் (54 ம் வாரம்) வரை முட்டையிடும்.
போதுமான தீவனம் மற்றும் செயற்கை முறையில் வெளிச்சமளிக்கும் போது வான்கோழிகள் வருடத்திற்கு 60 லிருந்து 100 முட்டைகள் வரை இடும்
70 சதவிகித வான்கோழிகள் முட்டைகளை பிற்பகலில் தான் இடும்.
வான்கோழி முட்டைகளின் வெளிப்புறத்தில் பொட்டுகள் போன்று காணப்படும். ஒரு வான்கோழி முட்டையின் எடை 85 கிராம் இருக்கும்.
வான்கோழி முட்டையின் ஒரு முனை கூர்மையாவும் அப்பகுதியில் முட்டையின் ஓடு தடிமனாகவும் இருக்கும்.
வான்கோழி முட்டையில், 13.1 சதம் புரதம், 11.8 சதம் கொழுப்பு, 1.7 சதம்மாவுச்சத்து மற்றும் 0.8 சதம் தாது உப்புகளும் இருக்கின்றன. அது போக,முட்டையின் ஒரு கிராம் மஞ்சள் கருவில் 15.67 லிருந்து 23.97 மில்லிகிராம் கொலஸ்டிராலும் இருக்கிறது.
|
வான்கோழி இறைச்சி
வான்கோழி இறைச்சியில் கொழுப்பு அதிகம் இல்லாததால் மக்கள் இதனை பெரிதும் விரும்புகின்றனர். வான்கோழி இறைச்சியில் 24 சதம் புரதம், 6.6சதம் கொழுப்பு மற்றும் நூறு கிராமில் 160 கலோரி எரிசக்தியும் உள்ளன. மேலும் தாது உப்புகளான பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம்,இரும்புச்சத்து, செலினியம் மற்றும் சோடியம் ஆகியனவும் உள்ளன. உடலுக்கு அவசியமாக தேவைப்படும் அமினோ அமிலங்களும் வைட்டமின்களான நியாசின், பி6 மற்றும் பி12 ஆகியனவும் வான்கோழி இறைச்சியில் அதிகமாக உள்ளன. அது மட்டுமன்றி, உடலுக்குத் தேவைப்படும் முழுமையடையாத கொழுப்பு அதிகமாகவும்,கொலஸ்டிராலின் அளவு குறைவாகவும் இருக்கிறது.
ஒரு வியாபார ஆராய்ச்சியின்படி, 10 முதல் 20 கிலோ உடல் எடையுள்ள 24வார வான்கோழி சேவல் ஒன்றை வளர்க்க ஆகும் செலவு ரூ.300 லிருந்து ரூ400 வரை. அதே வான்கோழியினை விற்பனை செய்வதன் மூலம் ரூ.500லிருந்து 600 வரை லாபம் கிடைக்கும். இதே போன்று, அதே 24 வார வயதுடைய வான்கோழி பெட்டை ஒன்றை விற்கும் போது ரூ.300 லிருந்து400 வரை லாபம் கிடைக்கும்.
No comments:
Post a Comment